Case Commentary – R. Rajagopal and Ors. V. State of Tamilnadu and Ors.
Kavin. V
Student, Agurchand Manmull Jain College, Chennai
Best Citation – Kavin. V, R. Rajagopal and Ors. V. State of Tamilnadu and Ors., 1 ILECR 18, 2022.
ராஜ்கோபால் எதிர் தமிழ்நாடு அரசு வழக்கு, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமை உரிமை மீதான ஒரு முக்கிய தீர்ப்பாகும். இவ்வழக்கில், அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காக ஒரு கட்டுரை அல்லது புத்தகத்தை அல்லது ஏதோ ஒரு வெளியீடை வெளியிடுவதை அரசு தடுக்க முடியாது. தனியுரிமைக்கான உரிமையைப் பற்றிஇ இந்திய வழக்குகளுக்கு மேலதிகமாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் சட்டவியலைக் குறிப்பிட்டு, தனியுரிமைக்கான உரிமையைப் பற்றி நீதிமன்றம் இவ்வழக்கில் விவாதித்துள்ளது, மேலும் தன்னுடைய தனியுரிமை மீறப்படும் என தெரிந்து ஒரு நபர் பொது சர்ச்சையை தானாக முன்வந்து எழுப்பினால் அல்லது பொதுப் பதிவின் ஒரு பகுதியான உண்மைகளின் அடிப்படையில் தகவல் வெளியிடப்பட்டால், உறுபு21-ல் இருந்து வரும் தனியுரிமைக்கான மறைமுகமான உரிமை மட்டுப்படுத்தப்படலாம் என்று முடிவு செய்தது. இருப்பினும், உறுபு 19(2) இன் கீழ் கண்ணியத்தின் நலனுக்காக இந்த விதி வரம்புகளுக்கு உட்பட்டது. உண்மையைப் புறக்கணித்து அல்லது தீங்கிழைக்கும் வகையில் தவறான அறிக்கைகள் வெளியிடப்படாவிட்டால், தனியுரிமைக்கான உரிமையை பொது அதிகாரிகளுக்கு அவர்களின் பொதுக் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான செயல்கள் மற்றும் நடத்தைகளுக்கு தனியுரிமைய மீறலுக்குப் பிறகே, முன்கூட்டியே அணுக முடியாததாக மாற்றப்பட்டது.